நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ஊர்களில் படுக சமுதாய மக்கள் தங்கள் முன்னோர்களை நினைவூட்டும் வகையில் சக்கலாத்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம் சக்கலாத்தி விழா படுக இன மக்களால் நடத்தப்படுகிறது. தங்கள் முன்னோர்களை வரவேற்கும் முகாந்திரமாக காட்டில் வளரும் சிறப்பு அம்சம் கொண்ட 7 வகை தாவரங்களின் பூக்களை ஒரு கொத்தாக இணைத்து வீட்டின் கூரை மீது சுமார் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு ஓடுகளுக்கு அடியில் வைத்து விடுகின்றனர்.

மேலும், முன்னோர்களுக்காக தயார் செய்த பனியாரம் மற்றும் உணவு வகைகள் அனைத்து வீடுகளிலிருந்து பெறப்பட்டு. தங்கள் இருப்பிடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள வனப்பகுதியில் வைத்து விட்டு மூதாதையர்களை விருந்து உண்ண அழைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.
வீட்டிற்கு திரும்பிய பிறகு ஒரு பாத்திரத்தில் அடுப்பு சாம்பல்களை நிரப்பி தாங்கள் வணங்கும் இயற்கை தெய்வங்களான சூரியன், சந்திரன் மற்றும் கால்நடைகள் அவற்றின் கொம்பு ஆகியவற்றுடன் தாங்கள் பயன்படுத்தும் விவசாய பொருட்களான கத்தி, மண்வெட்டி, கொத்து ஆகியவற்றின் படங்களை வரைந்து பட்டாசுகள் வெடித்து தங்கள் பாரம்பரிய விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.