கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெண்கள் பிரிவில் உள்ள ஆதரவற்ற இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையானது கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனைக்குத் தினமும் சுமார் 7000 வெளிநோயாளிகளும் 1600 உள்நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளை அடிக்கடி வெளியில் தூக்கி வீசும் அவலங்களும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல, இந்த வளாகத்தில் தெருநாய்களும் உலாவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொசுக்களினாலும் விலங்குகளினாலும் மனிதர்களுக்கு நோய்கள் பரவி வரும் சூழலில், வேறொரு சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு வந்து பூனை, நாய் போன்ற விலங்குகளினால் பாதிக்கப்படுவது என்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்தநிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளி ஒருவர் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். அவர் பெயர், ஊர் போன்ற தகவல்கள் இல்லாததால் அந்தப் பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் வார்டிலேயே மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வைத்துள்ளனர். இப்படியிருக்க மருத்துவமனையில் சுற்றி திரிந்த பூனை ஒன்று தரையில் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் உடலை கடித்தபடி இருந்துள்ளது. இதை அந்த வார்டில் நோயாளிகளின் உறவினர்கள் பார்த்து மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்த போதும், அவர்கள் உடனடியாக உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவரிடம் தகராறு செய்தவுடன் அவசர அவசரமாகப் பெண்ணின் சடலத்தை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

இறந்த பெண்ணின் உடலை பூனை கடிக்கும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்த நோயாளிகளின் உறவினர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இதுதொடர்பாக ஊடகத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஒளிப்பதிவு செய்த பொழுது அந்த நோயாளிகள் பிரிவில் பூனை சுற்றித்திரிந்த காட்சியும் பதிவாகியுள்ளது.

நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் பிரிவில் இறந்த உடலை உடனடியாக பிணவறைக்கு கொண்டு செல்லாமல், பூனை சடலத்தை கடிக்கும் வரை மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த வார்டுக்குட்பட்ட மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களைப் பணிநீக்கம் செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் தான் இதுபோன்ற கோர சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.