கோவை: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள குளங்கள் உருவான கதை மற்றும் அதன் வரலாறுகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள குளங்கள் உருவான கதை மற்றும் அதன் வரலாறுகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான சி.ஆர். இளங்கோவன், கோவை மாவட்டத்தில் இருக்கும் சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட பழமை வாய்ந்த குளங்கள் உருவாக்கப்பட்டதற்கான காரணம், குளங்கள் பல ஆண்டுகளாக கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்ததன் வரலாறு உள்ளிட்டவற்றை விவரமாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டு, கோவையின் பழமை வாய்ந்த குளங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.

"கொங்கு சோழர்களின் ராஜ்யம், மைசூர், விசயநகர பேரரசு மற்றும் மதுரையில் இருந்து இங்கு குடியேறியவர்கள், கோவையில் மழை நீரை பெரிய தொட்டி அமைத்து சேமிப்பது அரிதான காரியம் என்பதை உணர்ந்தனர். எனவே, மழை நீரை நொய்யல் ஆற்றின் மூலம் சிறு, சிறு வழிகள் வழியாக குளங்களுக்கு செல்லும் விதமாக அமைத்துள்ளனர்," இவ்வாறு எழுத்தாளர் சி.ஆர். இளங்கோவன்.
மேலும், கொங்கு பகுதிகளில் நிலவி வந்த வறட்சியைக் கருத்தில் கொண்டே குளங்கள் உருவாக்கப்பட்டன. பெரும்பாலான குளங்கள் 10-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்வெட்டுகளை சான்றாகக் கொண்டு, புதிய கால்வாய்கள் மற்றும் நீர்செல்லும் பாதைகளை உருவாக்கும் யோசனைகளையும் அவர் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, ஈரமான நிலங்களில் மருத்துவ தாவரங்களை நடவு செய்வது குறித்து வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் குன்ஹிகண்ணன் விளக்கிக் கூறினார்.