கோவை : 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சியையொட்டி, ரூ. 5.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கினார்.

65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் 285 பயனாளிகளுக்கு ரூ. 5.91 கோடி மதிப்பில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார். மேலும், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட 36 கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவினையொட்டி நடைபெற்ற கட்டுரைப் மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 நபர்களுக்கு பரிசுகளையும் வழங்கி அவர் கவுரவப்படுத்தினார்.