நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா, பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார்.

இன்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 188 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், இதுவரையில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, 20 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வுதியத்தொகை பெறுவதற்கான ஆணையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீலகிரி குறும்பர் பழங்குடியினர் கைவினை மற்றும் பல்நோக்கு சிறுதொழில் சங்கத்திற்கு வீட்டுத் தோட்டம் அமைக்க முதற்கட்டமாக ரூ.1.00,000/-த்திற்கான காசோலையும், மந்தாடா பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சந்தானகுமார் என்பவருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைக்க ரூ. 20,000/-த்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
மேலும், மந்தாடாவில் ஏற்பட்ட அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த பெங்களுரைச் சேர்ந்த ஜெயஶ்ரீ என்பவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து ரூ. 5.00,000/-த்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.