திருப்பூர் : பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி வகுப்பறைக்குள் அனுமதிக்காத தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி கலந்துகொண்டார்.
அப்போது, நிர்மலா தம்பதியினர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது :- எங்களது இரு பெண் குழந்தைள் ஷர்மிதா, யாஷிகா ஆகியோர் திருப்பூர் - பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்தனர். இந்த நிலையில், பள்ளி நிர்ணயித்த ரூ. 45,000 கட்டணத்திற்கு ரூ. 32,000 செலுத்தி விட்டோம். இந்த நிலையில் எஞ்சியுள்ள ரூ.13,000 இந்தப் பருவத்துக்கு உரிய ரூ.7000-ம் செலுத்தக் கூறினர். ஆனால், போதுமான வேலை இல்லாததால், பணத்தை செலுத்த முடியவில்லை.
எனவே, மீதித் தொகையை செலுத்த காலஅவகாசம் கேட்டோம். ஆனால், அவ்வாறு அவகாசம் தர மறுத்ததோடு கடந்த 13-ம் தேதி எங்கள் இரு பெண் குழந்தைகளுக்கும் மாற்றுச்சான்றிதழை கொடுத்து அனுப்பிவிட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோதும் உரிய பதில் இல்லை. எனவே, கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச்சான்றிதழை வழங்கிய தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளும்படி கூறியதாக மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.