உறுதி செய்யப்பட்ட போனஸ் வழங்காத தனியார் நிறுவனத்திற்கு எதிராக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி : நிர்ணயிக்கப்பட்ட போனஸ் தொகையை விட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைவாக வழங்கிய தனியார் நிறுவனத்தின் மீது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் தோட்ட தொழிலாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி : நிர்ணயிக்கப்பட்ட போனஸ் தொகையை விட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைவாக வழங்கிய தனியார் நிறுவனத்தின் மீது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் தோட்ட தொழிலாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



குன்னூர் பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி. தனியார் நிறுவனம் தேயிலைதோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்காமல் 8.33 சதவீதம் போனஸை வங்கி கணக்குகளில் வரவு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டதொழிலாளர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இன்று சந்தித்து மனு அளித்தனர்.

அதன்பின், ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் இயங்கி வரும் ஏ.வி.டி. தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக 8.33 சதவீதம் போனஸ் வழங்கி வருகின்றனர். இந்தாண்டு தொழிற்சங்கங்கள் மூலமாக நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் 8.33 சதவீதம் தோட்ட தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சங்கங்களும் தங்களை ஏமாற்றிவிட்டன. 



ஏ.வி.டி. நிர்வாகத்திற்காக மழை மற்றும் குளிர் என்று பார்க்காமலும், அட்டைகடி மற்றும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கிடையே பணி செய்தும் வரும் 1,200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் கிடைக்காததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர்களின் குடியிருப்புகள் மோசமான நிலையில் உள்ளது. அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும். கழிப்பிட வசதி மற்றும் செப்டிக் டேங்க் வசதி செய்து தர வேண்டும். மருத்துவ வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சிரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...