திருப்பூர்: வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என வட்டமலைக்கரை அணையைச் சார்ந்திருக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் சங்க ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வட்டமலை அணை நீரை எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள் ஒரு மனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். தற்போது, பருவ மழையின் காரணமாக நிரம்பும் நிலையில் உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, வெள்ளகோவில் அருகே கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு இறுதியாக 1984 மற்றும் 1986-ம் ஆண்டுகள் என இரு முறை மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கென தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு, அணைக்கு தண்ணீர் வரத்து இன்றி 20 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கிறது. பருவ மழை காலங்களில் கூட இந்த அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்திருக்கிறது.
இதனால், அணைக்கு அருகே உள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துபோயுள்ளது. அதே நேரத்தில், திருமூர்த்தி அணையில் உபரி காலங்களில் கள்ளிபாளையம் பகுதியில் இருந்து வட்டமலை அணைக்கு தண்ணீர் திறக்க அரசாணை இருந்தும், இதுவரையிலும் ஒருமுறை கூட அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, இனிவரும் காலத்திலாவது வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் விவசாயிகள்.