அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு இன்டர்ன்சிப் வழங்குவதற்கான ஆணை பிறப்பிப்பு

கோவை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயற்சி பெறுபவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சி (Internship) வழங்கிட அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயற்சி பெறுபவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பயிற்சி (Internship) வழங்கிட அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இந்தப் பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் 10,000 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆண்டு பயிற்சி வழங்கிட ரூ.50.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விவரங்கள் www.skilltaining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விபரங்களுக்கு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 044-22501002/22501006/22500900 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 

இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, 'ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை -600032 என்ற முகவரிக்கு 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...