கோவை: வன நர்சரிகளில் செடிகள் மற்றும் விதைகளுக்கு இனி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை வன பாதுகாவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த 12-ம் தேதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தலைமை வன பாதுகாவலர் ரோகித் திவாரி, துணை வனக் கண்காணிப்பாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆணையிட்டுள்ளார். அதாவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் வனத்துறைக்குச் சொந்தமான நர்சர்களில், விதைகள் மற்றும் செடிகளுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 2022-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு தங்களது பங்களிப்பை அளிக்கும் விதமாக, மாநில வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை அமைச்சகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.