நீலகிரி: உதகை அரசு பேருந்து நிலையத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது, தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பயன்படுத்தும் இடமாக இருப்பதால் இந்த பேருந்து நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதாலும் பேருந்து நிறுத்தங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாலும் மழைக்காலங்களில் இங்கிருந்து பேருந்துகளை இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லவும் சிரமமான நிலை நீடித்து வந்தது.
இதைத் தொடர்ந்து, உதகை பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் உதகை மலர் கண்காட்சிக்கு வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உதகை பேருந்து நிலையத்தை புதுப்பிக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தார்.
இந்த நிதி பற்றாக்குறை என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் நிதிகேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் ரூபாய் 3 கோடி அளித்து மொத்தம் ரூ.5 கோடி செலவில் பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இப்பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு தரமான பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.