கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் மொத்த வியாபார துணிக்கடை குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைவாக அணைத்தனர்.
கோவை : ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் மொத்த வியாபார துணிக்கடை குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைவாக அணைத்தனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சர் சண்முகம் சாலையில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரஞ்சித் என்பவர் கிரீன் கோல்ட் ஸ்டோர் என்ற துணிக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் துணிகள் மற்றும் பொம்மைகள் நேரடியாக மொத்த வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடையினுள் இருந்து கரும்புகை கிளம்பியது. மதிய உணவு வேளை என்பதால் கடையில் பணி செய்து கொண்டிருந்த ஊழியர்கள் உணவருந்தச் சென்றிருந்தனர். இதனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் கடையில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும், இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
