தருமபுரியில் மாணவிகளை பேருந்தில் வைத்து எரித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் விடுதலை

தருமபுரி: கடந்த 2000-ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆளுநரின் உத்தரவின் பேரில் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி: கடந்த 2000-ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆளுநரின் உத்தரவின் பேரில் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2000-ம் ஆண்டில், கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. இதையடுத்து அன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபட்டனர். தருமபுரியில் சாலை மறியல்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

அப்போது அங்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள், கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த பேருந்தை தருமபுரியில் வழிமறித்த ஒரு கும்பல், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது. இதில் பேருந்தில் இருந்த மற்ற மாணவிகள் தப்பிக்க, கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, அவர்கள் வேலூர் மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வந்தனர்.

இந்நிலையில், இவர்களை விடுவிக்க தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதற்கு ஆளுநர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதன் அடிப்படையில் குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நன்னடத்தை அடிப்படையில் இவர்கள் மூவரும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...