கோவை: இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை காவல்துறையினர், கேரள கைரளி மற்றும் தணியார் கல்லூரிகள் இனைந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியை இன்று நடத்தினர்.
கடந்த இரண்டு நாட்களாக கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ஜந்து மாணவர்கள் உயிரிழந்தனர். இதற்கு மாணவர்கள் ஹெல்மெட் அணியாததே காரணம் என கூறப்படுகிறது. எனவே கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் உத்தரவின் பேரில் இன்று காரமடை போலீசார் இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
காரமடை கண்ணார்பாளையத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர். காரமடை முக்கிய சாலைகளின் வழியே வந்த பேரணி கோவை-மேட்டுப்பாளையம் சாலை வழியே வந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
முன்னதாக இந்த பேரணியின் போது சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதே சமயத்தில் ஹெல்மெட் அணியாத வாகனங்களை நிறுத்திய போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய அறிவுறுத்தினர்.