கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு சென்னை செல்வதற்காக சென்ற தி.மு.க.,வை சேர்ந்த தூத்துக்குடி முன்னாள் எம்.பி ஜெயதுரையிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தொகுதி தி.மு.க முன்னாள் எம்.பி எஸ்.ஆர் ஜெயதுரை. இவர் நேற்றிரவு கோவையிலிருந்து சென்னை செல்ல விமான நிலையம் வந்துள்ளார். அப்போது விமானத்தில் ஏறுவதற்கு முன் சோதனை அதிகாரிகளும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் அவரையும், அவர் கொண்டுவந்த பை மற்றும் சூட்கேஸ்களை சோதனை செய்தனர்.
இதில் அவரிடம் ஐந்து தோட்டாக்களுடன் ஒரு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமான விதிப்படி இவற்றை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர். மேலும், ஆயுதம் கொண்டு வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதனால் கோபமடைந்த ஜெயதுரை, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல தான் உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்துள்ளதாக கூறிய அவர், தன்னுடன் அதை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கோரிக்கை வைத்தார். ஆனால், அதிகாரிகள் விமான நிலைய விதிகளுக்குட்பட்டு ஆயுதத்தை கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜெயதுரை அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை தனது உறவினர் ஒருவரிடம் வாங்கி ஒப்படைத்தார்.
இருப்பினும் அவர் பயணம் செய்யவிருந்த விமானம் கிளம்பிவிட்டதால் அடுத்த விமானத்தில் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் பீளமேடு போலீசார் அனுமதியின்றி விமான நிலையத்திற்குள் துப்பாக்கி கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், முன்னாள் எம்.பி இடமிருந்து விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.