பரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் எதாவது சொல்லிக்கொண்டிருப்பார் - உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: செய்திகளில் வருவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதாவது சொல்லிக்கொண்டிருப்பார் என்றும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது என்றும் திருப்பூரில் கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: செய்திகளில் வருவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதாவது சொல்லிக்கொண்டிருப்பார் என்றும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது என்றும் திருப்பூரில் கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகள் வழங்கினர்.



தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மற்ற மாநிலங்களை விட தமிழக கூட்டுறவு சங்கங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு பலதரப்பினரும் பயன்படும் வகையில் உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 166 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



பலியான, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான நிவாரண உதவிகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதனை அங்குள்ள கால்நடைத்துறை இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு கொண்டு சேர்க்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் முறையாக நிவாரணம் சென்றடையவில்லை என கூறுவது செய்தித்தாள்களில் வருவதற்காகவே, தவிர தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...