கோவை: கோவை மாவட்ட காவல் துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

காரமடை அருகே கோப்பனாரி மலை கிராமத்தில் கோவை மாவட்ட காவல் துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் ஏ.இ.எஸ் டெக்னாலஜி, ராஜஸ்தான் காஸ்மா ஆகிய அமைப்புகள் இணைந்து மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். நக்சல் தடுப்பு பிரிவு மேற்கு மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ், ஏ.இ.எஸ் டெக்னாலஜி ராஜஸ்தான் காஸ்மா இயக்குனர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரமடை ஆய்வாளர் சக்திவேல், நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் அரக்கடவு, மூனுக்குட்டை, குளியூர், கோப்பனாரி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி, சேலை, கொடுக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதிவாசி மக்கள், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும், அரக்கடவு சாலை சீரமைக்க வேண்டும், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பேசுகையில், "மலைவாழ் மக்கள் நல்ல சூழலில் வசித்து வருகிறார்கள். தற்போது பல்வேறு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தங்களின் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் 24 மணி நேரமும் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். காவல்துறை உங்கள் நண்பன்.
அடிப்படைத் தேவைகள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். அரக்கடவு சாலை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மாவோயிஸ்ட்டுகளின் ஊடுருவலைத் தடுக்க மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து, வனப்பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றார்.