கோவை: கோவை ரயில் நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர் ரயில் பெட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை போத்தனூர் அருகே உள்ள கல்லறை சேரியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53), இவர் கோவை ரயில் நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பணியில் உள்ள ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக சென்றிருக்கிறார். பணி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உடன் பணிபுரியும் தொழிலாளர்கள், முருகனைத் தேடியுள்ளனர். அப்போது அவரை ரயில் பெட்டியில் பிணமாகக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் நலக் குறைவால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.