கோவை: 'தி வீக்' இதழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த மருத்துவமனை எது? என்ற ஆய்வில் ஈடுபட்டது. சமீபத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் கோவை மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
கோவை: 'தி வீக்' இதழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த மருத்துவமனை எது? என்ற ஆய்வில் ஈடுபட்டது. சமீபத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் கோவை மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதிலும், தூய்மையை பேணிக்காப்பதிலும் கோவை அரசு மருத்துவமனை நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது.
கடந்த ஆண்டு இந்தக் கணிப்பில் ஒன்பதாவது இடத்தில் இருந்த இம் மருத்துவமனை தற்போது 5-வது இடத்தை பெற்றுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவமனை இந்த பட்டியலிலேயே இடம் பெறாமல் இருந்த நிலையில், தற்போது முன்னேற்றம் பெற்றுள்ளது பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன் கூறுகையில், "கடந்த ஆண்டில் ஒன்பதாவது இடத்தில் இருந்தோம். தற்போது ஐந்தாவது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் அரசு மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல சீசன் நோய்களான டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமானவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே, இந்த திடீர் காய்ச்சல் பாதிப்புகளால் வருபவர்களையும் நாம் கருத்தில் கொண்டு சிகிச்சைகள் கொடுத்து வருகிறோம்.
நம் மருத்துவமனையை தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பதாக அறிவித்த ஆய்வு குழுவினருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்த ஆண்டில் முதல் இடத்திற்கு வர முயற்சிப்போம்." என்றார்.