கோவை: 'தி வீக்' இதழ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள தனியார் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் கோவையின் கங்கா மருத்துவமனை முதல் இடத்தை பிடித்துள்ளது.
கோவை: 'தி வீக்' இதழ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள தனியார் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் கோவையின் கங்கா மருத்துவமனை முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த முதல் இடத்தை கங்கா மருத்துவமனை மூன்றாவது முறையாக பெற்றுள்ளது.

எலும்பு முறிவு சிகிச்சைகளில் தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளை பொறுத்தவரை டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனை முதல் இடத்தையும், கங்கா மருத்துவமனை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இது குறித்து கங்கா மருத்துவமனையின் தலைவர் ராஜசேகரன் கூறுகையில், "கட்டமைப்பு, வருமானம், நோயாளிகள் மீதான அக்கறை உள்ளிட்ட காரணங்களாலும், இந்தியா முழுவதும் இருக்கும் மருத்துவர்கள் அளித்த கருத்துக்களின் பேரிலும் இந்த முதல் இடம் கிடைத்துள்ளது." என்றார்.

இவர் ஆசிய கண்டத்தின் ஆர்தோபிடிக்ஸ் மருத்துவ சங்கத்தின் தலைவராக கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.