கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு நான்கு பேர் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நேற்று மாலையில் இருந்து இன்று வரை பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நேற்று மாலையில் இருந்து இன்று வரை பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (48). கூலி தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், காய்ச்சல் குணமாகாததையடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பெரியசாமியின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்க கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று இரவு உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் ஓடங்காட்டை சேர்ந்தவர் அந்தோணி (63). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

அதேபோல, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த சொர்ணவேலின் மனைவி ஆவுடை தங்கம் (47). இவர் பன்றி காய்ச்சல் பாதிப்பில் இன்று அதிகாலை உயிரிழந்தார். மேலும், பி.என் புதூரை சேர்ந்த சந்திரசேகரின் மனைவி சரஸ்வதி (43) இவரும் மர்ம காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் 46 பேரும், டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 5 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 80 பேரும் என மொத்தம் 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...