கோவை: ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக ஒருவர் பலியான சம்பவம் தடாகம் அருகே நிகழ்ந்துள்ளது.

தடாகம் பகுதியில் நேற்று 7 மணியளவில் இரவு பெண் காட்டு யானை மற்றும் அதன் குட்டியும் ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிகளுக்குள் துரத்த முயற்சி செய்தனர்.
இதையறியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி(52) என்பவரை அந்த காட்டு யானைகள் பலமாக தாக்கியது. உடனடியாக அவரை மீட்ட வனத்துறையினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சின்னத்தம்பி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்றதைத் தொடர்ந்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.