​Exclusive :கோவை வாசிகளே, உங்க வீட்டு பக்கம் தெருநாய்கள் காணாமல் போகுதா..? பிரியாணி ஆகலாம் உஷார்..!

கோவை: 'பிரியாணி' பேரைக் கேட்ட உடனே நா-ஊறுகிறதா? வித-விதமான வகைகளில் தேடித் தேடி உண்ணும் பிரியாணி பிரியர்களுக்கும், உணவகங்களின் ருசிக்கு அடிமையாக இருக்கும் உணவு பிரியர்களுக்குமான செய்தி இது.


கோவை: 'பிரியாணி' பேரைக் கேட்ட உடனே நா-ஊறுகிறதா? வித-விதமான வகைகளில் தேடித் தேடி உண்ணும் பிரியாணி பிரியர்களுக்கும், உணவகங்களின் ருசிக்கு அடிமையாக இருக்கும் உணவு பிரியர்களுக்குமான செய்தி இது.

சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ராஜஸ்தானில் இருந்து வரும் ரயில் ஒன்று இன்று வந்தடைந்தது. அந்த ரயிலில் இருந்து பல ஐஸ் பெட்டிகளில் அடைத்து எதோ ஒரு பொருள் இறக்கிக் கொண்டிருந்தனர் பாரம் தூக்கும் தொழிலாளர்கள்.



அந்த பெட்டியில் உள்ள பொருள் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே பெட்டியில் உள்ள பொருளை சோதனையிடத் தொடங்கினர்.

பெட்டியைத் திறந்த போலீசாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.. அதனுள்ளே பல நாட்களாக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நாய் கறிகள், ஐஸ் கட்டிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்த போது அத்தனையிலும் நாய்க்கறி.



ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை பறிமுதல் செய்த போலீசார், நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியைக் கண்டுபிடித்தனர்.

சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த நாய்க்கறியை அழித்த சென்னை நகர போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நம்ம ஊரின் நிலை?

நம் மாநிலத்தில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு அடுத்தபடியாக இருப்பது கோவை மாவட்டம். இங்கும் அவ்வப்போது உணவின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

ரயிலில் சென்னை வரை வரும் நாய்க்கறி கோவைக்கு வராமலா இருக்கும்! ஆனால், இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்கின்றனர் உணவு பாதுகாப்புத் துறையினர்.

கோவையின் புற நகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அடிக்கடி காணாமல் போகுவதாகவும் அவற்றை சிலர் கை கால்களை கட்டி மினிடோர் மற்றும் ஆட்டோக்களில் தூக்கி செல்வதாக பொதுமக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.

"இறந்த கோழிகளில் சில்லி சிக்கின் செய்து விற்பனை செய்கின்றனர், சுகாதாரமான முறையில் உணவுகள் இல்லை" என்று சாலையோர வியாபாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டை வைக்கும் நமக்கு, பெரிய உணவகங்கள் எவ்வாறு சுகாதாரமாக செயல்படுகின்றது என்பதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.

முறைகேடுகளை குறித்து கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியிருப்பதாவது :

"மீன்களை பதப்படுத்த அவற்றின் மீது பார்மலின் தெளிப்பதாக புகார்கள் வந்தது. உடனடியாக சோதனை செய்து, கோவையில் பார்மலின் தெளிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்வதில்லை என்று கண்டறிந்துவிட்டோம்.

கறிக்கடை வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

கோவையில் நாய்க்கறி தொடர்பாக எந்தவிதமான புகார்களும் எங்களுக்கு கிடைக்கலீங்க. புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். என தெரிவித்துள்ளனர்.

நாய்க்கறியை கொண்டு பிரியாணி தயாரிப்பவர்களை அடையாளம் காண்பதற்கு எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாத தமிழக உணவு பாதுகாப்புத் துறை, வெறுமனே, "நாய்க்கறி பிரியாணி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை" என்று சப்பைக்கட்டு கட்டுவது வேதனை தருவதாக உள்ளது.

ரூ.10 ஆயிரம் கொடுத்து ஒரு ஆட்டினை வாங்கி பிரியாணி செய்ய யோசிக்கும், மேல்தட்டு மற்றும் நடுத்தர உணவகங்கள் சில, இது போன்ற மாஃபியா கும்பல்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு தெருநாய் ஒன்றைப் பிடித்து, தோலுரித்து, ஆட்டுக்கறியாக்கி, பிரியாணியாக மாற்றி விடுகின்றனர்.

இது போன்ற நபர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். மக்களே, உங்கள் பகுதியில் தெரு நாய்களை யாரேனும் தூக்கிச் சென்றால் உடனடியாக அவர் தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறைக்கோ தகவல் கொடுத்துவிடுங்கள். 

இல்லையேல் புகைப்பட ஆதாரத்துடன் சிம்ப்ளிசிட்டிக்கு அனுப்பி வையுங்கள்.

ஏனென்றால், புகார்கள் வந்தால் தான் நடவடிக்கை எடுப்பார்களாம்...​

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...