திருப்பூர்: அரசு விழாவில் பங்கேற்க சென்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சாலையில் விபத்துக்குள்ளானவரை மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலையிலிருந்து காங்கயத்திற்கு அரசு விழாவில் நேற்று பங்கேற்க சென்றார்.

அப்போது, தாராபுரத்தை அடுத்து நஞ்சியம்பாளையம் அருகே முன்னால் நின்றுகொண்டிருந்த லாரியில் பின் பக்கமாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி விபத்துக்குள்ளானார்.
இதனைக் கண்ட அமைச்சர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விபத்துக்குள்ளானவரை மீட்டு தனது பாதுகாப்பிற்கு வந்த வாகனத்தில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

அவருடன் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டார்.