இஸ்லாம் குறித்து அவதூறாக விமர்சனம் : கோவையில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்கு

கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதரை மோசமாக சித்தரித்த பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதரை மோசமாக சித்தரித்த பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமன் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.,வை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் பேஸ்புக் மற்றும் சமூக வலை தளங்களில் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது. 

இந்தநிலையில், கல்யாணராமன் அவரது சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியினர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். 

அதேபோல அவர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (A) , 505 ( 2 ) ஆகிய பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...