கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 126 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை: கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின் பேரில் மேலும் 126 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின் பேரில் மேலும் 126 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 6-ம் தேதி அதிகாலை கோவை மாநகர தனிப்படை போலீசார் இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கிடைத்த தகவலின் பேரில், திருநெல்வேலியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் (TN 66 E 49 33) என்ற வாகனத்தில் வந்த ஜப்பாரின் மகன் ரசூல் முகைதீனை (43) போலீசார் சோதனை செய்து விசாரித்தனர்.

இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் ரசூலிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் கோவையில் உள்ள கே.ஜி ஹாஸ்பிடல் அருகே வாகனத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதேபோல சென்னை, மதுரை, கோவை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

 

இதையடுத்து கடந்த 12-ம் தேதி ரசூல் முகைதீன் மற்றும் இசக்கி பாண்டி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

பின்னர் ரசூல் முகைதீன் கூட்டாளிகளான துரை, மைதீன் ஆகியோரை கடந்த 16-ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர்.

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் திருடிய 40 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 126 இரண்டு சக்கர வாகனங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். 

மேலும், கைது செய்யப்பட்டவர்களை கோவை குற்றவியல் நடுவர் வேலுச்சாமி முன்பு நேற்று ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து இரு சக்கர வாகனங்களை மீட்ட தனிப்படை போலீசாரை கோவை மாநகர காவல் ஆணையர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...