கஜா புயலின் போது 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டதால், கால்நடைகள் உயிரிழப்பு தவிர்ப்பு : அமைச்சர் பெருமிதம்

திருப்பூர் : புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இந்தியாவில் முதன்முறையாக 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டதால், கால்நடைகளின் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இந்தியாவில் முதன்முறையாக 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டதால், கால்நடைகளின் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழாவில் காங்கயம், தாராபுரம் தொகுதிகளில் உள்ள 410 பயனாளிகளுக்கு 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான 410 இருசக்கர வாகனங்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திருப்பூர் மாவட்டம் நத்தகாடையூர் பகுதியிலும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதிகளிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இப்பகுதிகளில் கால்நடைத்துறை சார்பில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இந்தியாவிலேயே முதன்முறையாக 288 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து கால்நடைகளும் அங்கு அடைக்கப்பட்டதால், கால்நடைகளின் அதிக உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. 

தவறுதலாக சிலர் கால்நடைகளை மையங்களில் விடாததால் 55 பசுக்களும், 8 காளைகளும், 5 ஆயிரம் ஆடுகளும் பலியாகியிருப்பது பதிவாகியுள்ளது. இதற்கான உரிய இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். 



இக்கூட்டத்தில் காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...