65-வது அனைத்து இந்தியா கூட்டுறவு வார விழாவையொட்டி ரூ. 1.73 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி : உதகையில் 65-வது அனைத்து இந்தியா கூட்டுறவு வார விழாவையோட்டி, ரூ. 1.73 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி : உதகையில் 65-வது அனைத்து இந்தியா கூட்டுறவு வார விழாவையோட்டி, ரூ. 1.73 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் நடைபெற்ற 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சியையொட்டி கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் கஜா புயலில் பலியான 35 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.



இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சுயஉதவி குழு கடன், சிறு வணிக கடன், மகளிர் வளர்ச்சி கடன் என 357 பயனாளிகளுக்கு ரூ. 1.73 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுன் உள்ளிட்டோர் வழங்கினர். 



மேலும், கூட்டுறவு வார விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...