கோவை : ஸ்ட்டீரிட் ஆர்ட் திட்டத்தின் மூலம் கோவை ரயில்நிலையம் மற்றும் விமான நிலையத்தின் கட்டிடங்கள் உள்ளூர் கைவண்ணக் கலைஞர்களால் கலைநயம் பூண்டுள்ளது.
கோவை : ஸ்ட்டீரிட் ஆர்ட் திட்டத்தின் மூலம் கோவை ரயில்நிலையம் மற்றும் விமான நிலையத்தின் கட்டிடங்கள் உள்ளூர் கைவண்ணக் கலைஞர்களால் கலைநயம் பூண்டுள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் உயரமான அரசு கட்டிடங்களில் எழில்மிகு வண்ணச் சுவர் ஓவியங்களை வரைந்திட கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு, கோவை மாநகராட்சிக்குட்பட்ட டவுன்ஹால் பொது நூலகம், கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட 5 அரசு அலுவலகங்களை வண்ணமயமாக்கினர்.

இந்த நிலையில், தெற்கு ரயில்வேவின் சார்பில் கோவை மத்திய ரயில்நிலையத்தையும், கோவை சர்வதேச விமான நிலையத்தையும் கலைநயத்துடன் மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், கோவை மாநகராட்சியின் உதவியுடன் உள்ளூர் கலைக்குழுவினர், முதற்கட்டமாக கோவை ரயில்நிலையத்தில் தங்களது கலை சேவையை ஆற்றியுள்ளனர்.
இதனிடையே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அரசு கட்டிடங்களை வண்ணமயமாக்கும் ஸ்ட்டீரிட் ஆர்ட் திட்டம் தொடர்பாக கோவை மாநகாட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், ராக் அமைப்பின் செயலர் ரவீந்திரன் ராமசாமி, ஓவியக் கலைஞர் பூர்ணிமாக சுகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு இன்று ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில், ஸ்ட்டீரீட் ஆர்ட் இந்தியாவின் இணை நிறுவனர் ஜியுலியா அம்பிரோகியும் கலந்து கொண்டார்.

"இந்த 5 கட்டிடங்கள் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டதையடுத்து, கோவை விமான நிலைய நிர்வாகம் மற்றும் சேலம் தெற்கு ரயில்வே சார்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் உதவியுடன் ஸ்ட்டீரிட் ஆர்ட் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். ஸ்டார்ட் ஆர்ட் இந்தியா நிறுவனத்தின் கீழ் இந்த ஓவியர்கள் வழிநடத்த இருக்கின்றனர். கோவை மாநகராட்சியின் உதவியுடன், ஜீவானந்தம் அடங்கிய ஓவியக் கலைஞர்களுடன் கோவை ரயில்நிலையம் மற்றும் விமான நிலையத்தை அழகு பெறச் செய்துள்ளோம்," இவ்வாறு ராக் அமைப்பின் செயலர் ரவீந்திரன் கூறினார்.
