கோவை : தலித் அமைப்புகளின் ஊர்வலத்தைக் கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் நடத்தும் முழு கடையடைப்பு போராட்டத்தால், அசம்பாவிதத்தை தவிர்க்கும் விதமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட போலீசார் கருமத்தம்பட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சோமனூர் அருகே செகுடந்தாளி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உயர் சாதியினரால் கடந்த 16.11.1999 அன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையொட்டி, ஆண்டுதோறும் செகுடந்தாளியில் உள்ள முருகேசன் நினைவிடத்தில் தலித் அமைப்பினர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தலித் அமைப்பினர் ஊர்வலமாக வந்த போது ரமேஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஊர்வலத்தால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி இந்த ஆண்டு தலித் அமைப்பினரின் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று காலை முதல் சோமனூர், கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம், சேடபாளையம், செகுடந்தாளி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும், விசைத்தறி கூடங்களும் அடைக்கப்பட்டுள்ளது.

காலையில் இருந்து ஒவ்வொரு அமைப்பு சார்பாக முருகேசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகள் சார்பில் போராட்ட அறிவிப்பு மற்றும் தலித் அமைப்புகளின் ஊர்வலம் நடைபெறுவதால் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.