கோவையில் களைகட்டிய விளக்குகள் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை

கோவை: இந்த மாதத்தில் கார்த்திகைத் தீபத் திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி கோவையில் 'விளக்குகள் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை' கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.


கோவை: இந்த மாதத்தில் கார்த்திகைத் தீபத் திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி கோவையில் 'விளக்குகள் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை' கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.



கைவினைப்பொருட்கள் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள 'தமிழ்நாடு அரசு நிறுவனம் பூம்புகார்' அனைவரும் அறிந்ததே. இந்த தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது. 

அதேபோல, இவ்வாண்டும் 'விளக்கு திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை' நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 15-ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி 30-ம் தேதி வரை நடக்கிறது.



இந்த நாட்களில் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளக்குகளை பார்வையிட்டு, வாங்கிச் செல்லலாம். 



இக்கண்காட்சியில், பித்தளையில் காமாட்சி தீபம், நந்தா தீபம், மலபார் தீபம், அஷ்டோத்திர தீபம், லக்ஷ்மி தீபம், அன்னம் மேஜை விளக்கு, அன்னம் தொங்கு விளக்கு, தூண்டா விளக்கு, பாவாடை விளக்கு, லக்ஷ்மி தாமரை விளக்கு, நவக்கிரக தீபம், கஜ லக்ஷ்மி தீபம் உள்ளிட்ட ஏராளமான விளக்குகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



மேலும், இங்கு விற்பனை செய்யப்படும் எல்லா விளக்குகளுக்கும் 10 முதல் 20 சதவீதம் வரை சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும். இக்கண்காட்சி மூலம் 10 லட்சம் மதிப்பிலான விளக்குகள் மக்களால் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பூம்புகார் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...