கோவை: கோவை - பொள்ளாச்சி சாலையில் விதியை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் அண்ணாச்சி சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மனோகரனின் மகன் நாகேந்திர பாரதி (19). அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் (15) மற்றும் பாபு (19) ஆகிய 3 பேரும் கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, தாமரைக் குளம் அருகே செல்லும்பொழுது எதிரே வந்த காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரை ஓட்டிவந்த உடுமலைப் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு (58) என்பவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர்.

மேலும், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் விதியை மீறி ஹெல்மெட்கள் அணியாமல் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.