திருப்பூர் : உடுமலை அருகே உள்ள திருமூா்த்திமலையில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கஜா புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அருவியின் கீழ்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், பாதுகாப்பு கருதி கோவில் பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மடத்துக்குளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோவில் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கிய கோவில் பகுதியை பார்வையிட்டார். பொதுமக்கள் யாரும் அருவி மற்றும் கோவில் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாக்கும் வகையில், தடுப்புகள் அமைத்துக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு காவல்துறை, வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.