கோவை : மழை, புயல் போன்ற பேராபத்துகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்க கோவை அரசு மருத்துவமனையில் பேரிடர் மேலாண்மை சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமில்லாது திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் அருகே உள்ள அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல, இங்கு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது, தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்தினால் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியிருக்க திண்டுக்கல்லில் 20 - 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் புயலானது, பழனி வழியாக பாலக்காடு - திருச்சூர் அருகே அரபிக்கடல் சென்றடையும் என எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கஜா புயலானது பாலக்காடு அருகே வருவதால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யவும் வாய்ப்புள்ளது, என தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், இந்த கனமழையினால் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை கொடுக்க கோவை அரசு மருத்துவமனையில் பேரிடர் மேலாண்மை சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் தேவையான அளவிற்கு மருந்துகளும், சிறப்பு மருத்துவர்களும் இருப்பதால் பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை என கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.