கஜா புயல் எதிரொலி : நீலகிரியில் பெய்த சாரல் மழையால் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கஜா புயல் எதிரொலியாக பெய்த சாரல் மழை மற்றும் கடுமையான பனி மூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கஜா புயல் எதிரொலியாக பெய்த சாரல் மழை மற்றும் கடுமையான பனி மூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். 

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இங்குள்ள சுற்றுலாத்தலங்களிலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், கடும் மேகமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், மேகமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இதனை சுற்றுலாப் பயணிகள் ரசித்து சென்றாலும், இயற்கை காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பனிமூட்டத்துடன் கடும் குளிரும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெம்மை ஆடைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...