கோவை : சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள செல்லும் 27 பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் பந்த் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.
பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயணிகளின் மிகவும் பாதிக்கப்பட்டனர்.