கோவை : கணுவாய் அருகே குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டியடிக்கும் வனத்துறையினர் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை : கணுவாய் அருகே குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டியடிக்கும் வனத்துறையினர் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தடாகம் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறி காட்டு யானை, பன்னிமடை அருகே உள்ள கணுவாய் குட்டையில் முகாமிட்டுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, விரைந்து வந்த அதிவிரைவு படையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டு யானைகளையும் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த நடவடிக்கைகளும் பலனிக்கவில்லை.

குறிப்பாக, பட்டாசுகளை வெடித்தும், அதிபயங்கர ஒலி எழுப்பியும் இரு யானைகளும் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்த வருகின்றன. மாறாக, அங்குள்ள புதரில் படுத்து பொழுதை போக்கி வருகிறது. தற்போது, பெய்து வரும் மழையினால், வனப்பகுதிகளுக்குள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குட்டியுடன் தாய் யானை மீண்டும் வனத்திற்குள் செல்ல அடம்பிடித்து வருகிறது.

காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சிகள் இருள் சூழ்ந்த பிறகும் கைகொடுக்கவில்லை. இதனால், ஜுப்பின் மூலம் அந்த யானைகளைக் கண்காணித்து வருவதுடன், பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.