திருப்பூர் : ஜவுளித் துறையின் நுகர்வோர் - விற்பனையாளர் ஆலோசனைக் கூட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உருகுவே மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நடக்கிறது.
திருப்பூர் : ஜவுளித் துறையின் நுகர்வோர் - விற்பனையாளர் ஆலோசனைக் கூட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உருகுவே மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நடக்கிறது.
ஜவுளித் துறையில் நுகர்வோர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பயனடையும் வகையில் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் உருகுவே நாட்டின் தலைநகர் மொண்டேவீடியோவிலும், சிலி நாட்டின் தலைநகர் சாண்டியகோவிலும் நடத்தப்படுகிறது. இரண்டு இடங்களிலும் தலா 25 அரங்குகளை அமைத்து தங்களது உற்பத்தியை விளம்பரப்படுத்துகின்றனர். இந்த அரங்குகளில் உருகுவே, சிலி நாடுகளின் தற்போதைய டிசைன்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.