சென்னை : கொங்கு மண்டலத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 14-ம் தேதி மனித உரிமை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயனுடன் கொங்கு குளோபல் ஃபார்மின் தலைவர் ஏ. சக்திவேல், துணைத் தலைவர் வனிதா மோகன் மற்றும் இயக்குநர்கள் சி.ஆர். சுவாமிநாதன், யு.ஆர்.சி. தேவராஜன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, கொங்கு மண்டலத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது, கொங்கு மண்டலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். மேலும், கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதோடு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட இருப்பதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீர்நிலைகள் சீரமைக்கும் நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, மழைநீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையிலான 'கொங்கு நீர்' திட்டத்தை செயல்படுத்தும் விதமாக பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு முறை அமைக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.