திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இறைச்சி கடைக்காரர்கள் சிலர், இறைச்சிக் கழிவுகளை பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பலரிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் வஞ்சிபாளையம் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இறைச்சிக் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.