திருப்பூர் : தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருப்பூர் : தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு இன்று திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பிலான முப்பெரும் விழா திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு, திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் இரா.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்த திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் முருகேசன், திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தினை வாழ்த்தி பேசினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கான நூலகத்தினை திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர்.முருகநாதன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது :- வாசிப்புத்திறன் குறைந்துவரும் இக்காலத்தில் வாசிப்பு திறனை வளர்த்தக்கூடிய வகையில் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் திறக்கப்பட்ட இந்த நூலகம் திருப்பூரில் மாணவர்களிடையே, பொதுமக்களிடையே வாசிப்புதிறனை மேம்படுத்தும். இந்திய மருத்துவக்கழகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவகாப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர தயாராக இருக்கிறோம்.
அதேபோல, எப்போதும் தங்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் செய்தியாளர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் சிறப்பு மருத்துவமுகாம் ஏற்பாடு செய்துதர இருக்கின்றோம். அதன்மூலம், செய்தியாளர்கள் தொடர்ந்து தங்கள் உடல்நலனை கருத்தில்கொண்டு பணியாற்ற வேண்டும். தமிழ்சங்கத்தோடு சேர்ந்து திருப்பூரில் மிகப்பெரிய இலக்கிய சந்திப்பு நடத்த வேண்டும். அதன்மூலம் மாணவர்களிடையே இலக்கிய போட்டிகளை நடத்திட வேண்டும், இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார். இதில், மாநகர / மாவட்ட செய்தியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் .