கோவை நீதிமன்ற நீதிபதி மீது மத்திய அரசின் பெண் வழக்கறிஞர் காவல்துறை ஆணையரிடம் புகார்

கோவை : கோவை நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல்துறை ஆணையரிடம் மத்திய அரசின் பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

கோவை : கோவை நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர காவல்துறை ஆணையரிடம் மத்திய அரசின் பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில், போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக சஞ்சய் பாபா விசாரணை நடத்தி வருகிறார். இதே நீதிமன்றத்தில் மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு வழக்கறிஞராக ரேணுகா பணியாற்றி வருகிறார்.



இந்த நிலையில், இன்றியமையாத பண்டங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளின் போது வாய்மொழியாகவும், செயல்கள் மூலமாகவும் பொறுப்பு நீதிபதியாக உள்ள சஞ்சய் பாபா துன்புறுத்துவதாக மாநகர காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். அதேபோல, நீதிபதிகள் தன்னுடைய வழக்கை மட்டும் காலதாமதம் செய்தும், சிறுமைப்படுத்தியும் பேசுவதால் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, நீதிபதி மீது பணியிடங்களில் பெண்கள் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.



முன்னதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு வழக்கறிஞர் ரேணுகா, போதைப்பொருள் வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் பொறுப்பற்று செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டதால், போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் 26 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோவை இன்றியமையாத பண்டங்கள் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நீதிபதி மீது வழக்கறிஞர் ரேணுகா புகார் அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...