கோவை : தமிழக அரசின் இதுவரையிலான செயல்பாடுகளில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதே சிறப்பானதாக இருந்தது என திராவிட கட்சியின் தலைவர் கி.வீரமணி கூறினார்.

கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி பங்கேற்க வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தற்போது நிலவி வரும் மதவாதம், பறிபோய் வரும் மாநில சுயாட்சி உள்ளிட்டவை பற்றி மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படும். பாலின கொடுமைகள் சாதிய அடிப்படையில் நடைபெறுவது அரசுக்கு மிகப்பெரிய அவமானமாகும். ஆணவ கொலையை தடுக்க காவல்துறையில் இதற்கென்று தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.
இதுவரையில் தமிழக அரசு நடந்து கொண்டதில் கஜா புயலின் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது சிறப்பாக உள்ளது. பேரிடர் மேலாண்மை வாரியம் இந்த முறை சிறப்பாக தனது பணியை செய்துள்ளது. தமிழக அரசு தனது உரிமைக்காக மத்திய அரசுடன் போராடினால் இன்னமும் பாராட்டலாம், என்றார்.

இதைத் தொடர்ந்து, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக அவர் கூறியதாவது :- சபரிமலை பிரச்சனை என்பது மதவாதிகளால் தூண்டப்படுகிறது. கேரள அரசை வீழ்த்துவதற்கு மதவாதிகள் செய்யும் சதி இது. பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும், பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று கூற மதவாதிகள் யார்..?. மேலும், சபரிமலை விவகாரத்தில் கேரள காங்கிரஸ் கட்சி வாக்குக்காக அரசியல் செய்வது கண்டனத்துக்குரியது.
20 தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதை விட உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்துவது தான் முக்கியமானது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு தோல்விகளை கண்டு வருகிறது. தங்களது தோல்வியை திசைதிருப்பவே ராமர் கோவில் விவகாரத்தை அவ்வப்போது கையில் எடுத்து வருகிறார்கள், என்றார்.