திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி ஜனார்த்தனா மெட்ரிக் பள்ளி செயல்படுவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரி நடவடிக்கைக்கு பின் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கஜா புயல் தாக்கத்தின் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புயல் காரணமாக கன மழை பெய்துவரும் மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூரில் இரவு முதலே மழை கொட்டத் துவங்கியது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, பள்ளி விடுமுறை குறித்து பல்லடத்தை அடுத்த கரடி வாவியில் செயல்பட்டுவரும் ஜனார்த்தனா மெட்ரிக் பள்ளிக்கு பெற்றோர்கள் தொடர்பு கொண்ட போது பள்ளிக்கு விடுமுறை இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் பெற்றோர் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் சொட்டச்சொட்ட நனைந்த படி பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் கூட்டிவந்ததோடு, பள்ளி ஆசிரியர்களிடம் விடுமுறை குறித்து பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு எச்சரித்ததைத் தொடர்ந்து நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது.