தென்தமிழகத்தை கஜா புயல் உலுக்கிய நிலையில், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் பாம்பன் பாலத்தை மூழ்கடித்தது போன்ற உண்மையானது அல்ல என தெரிய வந்துள்ளது.
தென்தமிழகத்தை கஜா புயல் உலுக்கிய நிலையில், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் பாம்பன் பாலத்தை மூழ்கடித்தது போன்ற உண்மையானது அல்ல என தெரிய வந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்று வீசியது.
கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்துள்ளதாகவும், 81,948 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கஜா புயலின் தாக்கம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிலையில், கஜா புயல் ராமேஸ்வரத்தில் இருக்கும் பாம்பன் பாலத்தை மூழ்கடித்ததைப் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஆனால், இது பழைய வீடியோ என்றும், முன்பு ஒருமுறை வீசிய புயலின் போது எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது கஜா புயலின் தாக்கம் என குறிப்பிடப்பட்டு பரவி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.