கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் : தமிழக அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு

சென்னை: கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று இரவு நாகைக்கு அருகே கரையைக் கடந்தது. இதனால், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :- கஜா புயல் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் நாகைக்கு அருகே கரையைக் கடந்தது. அப்போது, 110 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாகப் பதிவாகியுள்ளது. இதனால், நாகை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. புயல் மற்றும் கன மழையால் 11 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. கஜா புயல் கரையைக் கடந்து தற்போது திண்டுக்கல் பகுதியில் நிலவி வருகிறது. பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே, கஜா புயல் வருவது குறித்து ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தாழ்வான பகுதி, குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தமிழகத்தில் இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை நின்ற பிறகு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செய்யப்படும். நிவாரண முகாம்களில் 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். புயல் மற்றும் கன மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...