கோவை: கஜா புயல் கரையை கடப்பதை அடுத்து கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும். பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, நல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளில் பரவலான மழை பெய்யும்.
இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 28 முதல் 29 டிகிரி செல்சியசாகவும், இரவு நேர வெப்ப நிலை 18 செல்சியசாகவும் நிலவ வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது.
இந்த இரண்டு நாட்கள் மழை பதிவாகும் என்பதால் விவசாயிகள் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை சேமித்து வைக்க வேண்டும். கஜா புயல் கேரளா மாநிலம் அரபிக்கடலில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது." என்றார்.