நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமுடன் இயக்க காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமுடன் இயக்க காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்றப் பகுதிகளி்ல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கோத்தகிரியில் உள்ள மலைப்பாதையிலும், உதகை, குன்னூரில் உள்ள சுற்றுலாத்தலங்களிலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், கடும் மேகமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மேகமூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் இதனை சுற்றுலாப்பயணிகள் ரசித்து சென்றாலும், இயற்கை காட்சிகள் அவ்வப்போது மறைந்துவிடுவதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பனி மூட்டத்துடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.