கடும் எதிர்ப்பு: சபரிமலைக்கு செல்ல கொச்சின் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் பெண் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்

கொச்சின்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்பட உள்ளது. பெண் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கோவிலுக்கு செல்ல கொச்சின் விமான நிலையத்தை அடைந்துள்ள காரணத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது.

கொச்சின்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்பட உள்ளது. பெண் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் கோவிலுக்கு செல்ல கொச்சின் விமான நிலையத்தை அடைந்துள்ள காரணத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், அய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.

இதற்கிடையில், பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு திருப்தி தேசாய் கடிதம் எழுதியுள்ளார். அதில், சபரிமலைக்கு ஒரு குழுவினருடன் தான் வர உள்ளதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் கேட்டுள்ளார்.

இதற்காக தனக்கு மிரட்டல்களும் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக கொச்சி விமான நிலையத்தில் திருப்தி தேசாய் வந்து இறங்கியுள்ளார். விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்று வருவதால், திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த குழுவினரை வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என கேரள பா.ஜ.க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கேரள மாநில பா.ஜ.க நிர்வாகி எம்.என்.கோபி இது தொடர்பாக கொச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "காவல்துறை வாகனம் மூலமாகவோ பிற அரசு வாகனங்கள் மூலமாகவோ திருப்தி தேசாய் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம். விமான நிலை டாக்ஸிகளும் திருப்தி தேசாயை அழைத்துச்செல்லாது.

திருப்தி தேசாய் செல்ல விரும்பினால் தனது சொந்த வாகனத்தில் செல்லட்டும். விமான நிலையத்தை விட்டு திருப்தி தேசாய் வெளியேறினாலும் கூட அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் நடைபெறும்." என்றார். 

திருப்தி தேசாய் கொச்சன் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரமாகக் காத்து கொண்டு இருக்கிறார். விமான நிலைய வாசலில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவரை காவல்துறையினர் விமான நிலையத்தின் உள்ளேயே காத்திருக்க வைத்துள்ளனர்.

திருப்பி தேசாயிடம் வெளியே உள்ள எதிர்ப்பை குறித்து காவல்துறையினர் தெரிவித்த போது தான் பின் வாங்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆகையால் அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதை குறித்து கொச்சின் போலீசார் ஆலோசித்து வருகின்றனர். அவர் விமான நிலையத்தில் இருந்து சபரிமலைக்கு கிளம்பினால் வழி எங்கும் அவரை தடுத்து நிருத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி உள்ளனர்.

சபரிமலை சுற்றி 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. 144 தடை உத்திரவு போடப் பட்டுள்ள பகுதியில் யாரும் ஊர்வலம் நடத்தவும் கூட்டாக பிரார்த்தனை நடத்தினாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...