நீலகிரி: நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் காட்டு பூனை பரிதாபமாக உயிரிழந்தது.

வெலிங்டன் பகுதியில் உள்ள பிளாக் பிரிட்ஜ் சாலை அருகே நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த விபத்து குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த காட்டு பூனையின் உடலை மீட்டனர். வனப்பகுதியில் அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது என்று அறிவுறுத்தியும், தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை இயக்குவதன் காரணமாக இந்த விபத்துகள் நடைபெறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது உயிரிழந்துள்ள காட்டு பூனை அழிந்து வரும் இனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.